பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மீது நடைபெறக்கூடிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தேனி, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் கடலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருபத்தி ஒரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பட்டியல் இனத்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதைபொறுத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
