சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியில் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு சாதிசான்றிதழ் தேவைப்படுகின்றன. அதற்காக இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் […]
