புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி சாதிச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியினர் மலையாளி சாதி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்று பேசினார். இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க. தேவராஜ் போன்றோர் பங்கேற்று சாதி சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது, 4 வருடங்களுக்கும் மேல் […]
