“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]
