பீரேஸ்வரர் கோவிலில் வினோதமாக நடைபெற்ற திருவிழாவில் ஆண்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசி கொண்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையில் இருந்து 3-வது நாள் வினோதமாக சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதாவது திருவிழாவின் முதல்நாளே மாடு வளர்ப்பவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து பசு சாணத்தை கொண்டு வந்து கோவில் அருகில் உள்ள ஒரு இடத்தில் குவித்து வைப்பார்கள். இதனையடுத்து பீரேஸ்வரருக்கு […]
