சாட்சிகள் சொல்ல வந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரி ஏரிபகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஈஸ்வரி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், அன்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் 4 பேர் நீதிமன்றத்தில் […]
