மனைவியை கொலை செய்துவிட்டு பிணத்தை மூட்டையில் கட்டி வைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தனிப்பாறை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அம்சகொடி என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளார். மேலும் மணிமாறன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணேசனும், அம்சகொடியும் அவர்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணேசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் […]
