கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேஸ்வரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதனை முன்னிட்டு அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் […]
