இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்கா சவூதி அரேபியாவில் உள்ளது. இந்த நிலையில் மெக்காவின் கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அதன்பின் அந்த பகுதியில் உள்ள வானம் வெளிச்சமாக மாறியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. […]
