அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜடா புயல் தாக்கியது. இதனால் அம்மாகாணத்தில் உள்ள சவப்பெட்டிகள் அனைத்தும் நான்கு வாரங்களாக நகரம் முழுவதும் காணப்படுவதாக தகவல் வெளியாகியது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வீசிய புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் இடுகாட்டில் இருந்து அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் உறவினர்களின் சவப்பெட்டிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிக்குழுவை […]
