பி.இ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் கட்டணம், பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்து ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி […]
