சர்வைவர் நிகழ்ச்சி குறித்து காயத்ரி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறினார். அம்ஜத்கானிடம் தோல்வி அடைந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே கொடுக்கப்படும் டாஸ்குகளில் அவ்வப்போது மட்டும் தான் காயத்ரி வெற்றி பெற்றிருக்கிறார். அதிக அளவு தோல்வியை சந்தித்து மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் மூன்றாம் உலகத்தில் 40 நாட்களுக்கு […]
