பெலாரஸ் நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக போலந்து வாழ் பெலாரஸ்யர்கள் தினந்தோறும் ஒன்று கூடி அலறல் ஒலியை எழுப்பி வருகின்றனர். பெலாரஸ் நாட்டில் 26 ஆண்டுகளாக லுகாஷென்கோ என்பவர் அதிபராக இருந்து வருகிறார். இவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் லுகாஷென்கோவே 80 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவியை […]
