Categories
உலக செய்திகள்

75-வது சுதந்திர தினம்…. விண்வெளியில் இருந்து…. இந்தியாவிற்கு வாழ்த்து செய்தி….!!

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்திய அமெரிக்க விஞ்ஞானி ராஜா சாரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது பூர்விக ஊரான ஹைதராபாத் நகரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  

Categories
உலக செய்திகள்

விண்வெளி குறித்து அறிவியல் ஆராய்ச்சியில் இறங்கிய தனியார் குழு…. வெளியான தகவல்…..!!!

விண்வெளி குறித்து முதல் முறை வணிக ரீதியிலான அறிவியல் ஆராய்ச்சியை தனியார் குழு மேற்கொள்ள உள்ளது. விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா, அகசியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைந்து முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியிலான 4 வீரர்களை கொண்ட குழுவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த  வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 21 மணி நேர […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்… சீன விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்….!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை செய்து வரும் சீன வீரர்கள் அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சீன அரசு தங்களுக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று, சென்ஸோ 13 என்ற விண்கலத்தில் ஜாய் சிகாங், யே குவாங்ஃபு என்ற இரண்டு வீரர்கள் மற்றும் வாங் யாப்பிங் என்ற வீராங்கனை ஆகிய மூவரும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு அனுப்பப்பட்டனர். விண்வெளியில் மிகக் […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் எடுக்கப்படும் முதல் திரைப்படம்.. படப்பிடிப்பு கருவிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது..!!

ரஷ்யா, முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரைப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.  ஆங்கில திரையுலகில் அதிகமாக விண்வெளி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விண்வெளிக்கே நேரடியாக சென்று முழு திரைப்படத்தையும் உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நடிகரான டாம் குரூசை கதாநாயகனாக வைத்து விண்வெளிக்கு சென்று திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கடந்த வருடத்தில் நாசா தெரிவித்திருந்தது. எனினும் அதன் பின்பு அப்படம் தொடர்பில் எவ்வித தகவலும் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தை இயக்க சிறப்பு பயிற்சி.. அமீரக விண்வெளி வீரர்கள் பற்றிய தகவல்..!!

அமீரகத்தின் விண்வெளி வீரர்களுக்கு, சர்வதேச விண்வெளி மையத்தை இயக்குவதற்கான சிறப்பு பயிற்சிகள் நாசாவின் டி-38 ஜெட் விமானத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தினுடைய பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரியும், சுல்தான் அல் நியாதியும் ஆவர். இதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின்  மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஹசா அல் மன்சூரி சென்று வந்திருக்கிறார். எனினும் சிறந்த பயிற்சியை பெறுவதற்காக தற்போது அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். இதில் நாசாவின் கீழ் இயங்கி […]

Categories

Tech |