சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை வந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஸ் சாவ்லா,கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர். இன்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். […]
