தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. […]
