சர்ச்சைக்குரிய ஓவியத்தை வெளியிட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து பாத்திமா காவல்துறையில் சரணடைந்துள்ளார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19ம் தேதி அரை நிர்வாண கோலத்தில் தனது மகன் மற்றும் மகள் வரைந்த ஓவியத்தை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, ரெஹானா பாத்திமாவின் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து கேரள […]
