தமிழகத்தில் சமீப காலமாக பிராங்க் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் என குறிவைத்து பிராங்க் வீடியோவை எடுத்து அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இந்த சூழலில் கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் எனும் பெயரில் […]
