வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]
