மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]
