சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]
