சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பின் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அரசின் தடையை மீறியும் செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து எச்சரிக்கை விடுத்து கடையை மூடியுள்ளனர்.
