பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் Chailahi என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பண்டித் பிரம்மதத் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விஸ்வகர்மா (Chrijesh Vishwakarma) என்ற மாணவன் படித்து வந்துள்ளான். சிறுவனின் வயது 13 ஆகும். இம்மாதம் 8 ஆம் தேதி, மூக்கிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், முகம் வீங்கி, கைகளிலும் காயத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளான் விஸ்வகர்மா. மகனைக் கண்ட பெற்றோர் பதற, விஸ்வகர்மாவின் மாமாவான […]
