மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சாந்தா சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடியை அடுத்துள்ள ஆரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]
