சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வந்தனாக்குறிச்சி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பொன்னமராவதி பகுதியில் சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த முகம்மது ரபிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் வேனில் வந்த இரண்டு நபர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். […]
