தெற்கு சூடானில் ஏற்பட்ட சரக்கு விமான விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று 18 பயணிகளுடன் தலைநகர் ஜீபாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில மணித்துளிகளில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியை ஒட்டி விழுந்து நொறுங்கியது. அந்த பயங்கர விமான விபத்தில், விமானத்தில் […]
