Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்… பள்ளி வேன் மீது மோதிய சரக்கு லாரி… 19 குழந்தைகள் பலி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொடக்க பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சென்ற மினி வேன் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஸ்லு-நடால் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்ப மினி வேனில் ஏறியிருக்கிறார்கள். அந்த வேனில், குழந்தைகள் 19 பேர், வேன் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என்று 21 பேர் பயணித்திருக்கிறார்கள். நெடுஞ்சாலையில், பயணித்த வேன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. வந்தடைந்த 5,200 டன் ரேஷன் அரிசி…. குடோன்களில் ஒப்படைப்பு….!!

மத்திய அரசின் சார்பில் ரேஷன் கடைகளுக்கு சுமார் 5,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2,600 டன் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த கோழி தீவனம்…. 2,600 டன் மக்காசோளம்…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. “53 பேர் பரிதாபமாக பலி”…. பிரபல நாட்டில் கோர சம்பவம்….!!

மெக்சிகோவில் சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் கிட்டதட்ட 107 பேரை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சியாபாஸ் மாநில தலைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த சரக்கு லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 57 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… கவிழ்ந்த சரக்கு லாரி… 3 பேருக்கு படுகாயம்…!!

ராமநாதபுரத்தில் குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி டயர் வெடித்து கவிழ்த்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதிக்கு மதுரையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி சரக்கு லாரி வந்துள்ளது. இதனை மதுரையை சேர்ந்த அய்யங்காளை என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சத்திரக்குடியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வைத்து எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த அய்யங்காளை மற்றும் உடன் இருந்த 2 பேருக்கும் […]

Categories

Tech |