சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்ததால் 16 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரங்கூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் ஏறி விவசாய வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காரியானூர் ஜெயந்தி காலனி பகுதியில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஓரங்குர் […]
