தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தார்கள். இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021-22 ஆம் வருடத்திற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது வழங்கப்பட்டது. […]
