Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200…. சிலிண்டர் மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும்…. முக்கிய தகவல்…!!!!

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. சமையல் எரிவாயு நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த மானியம் கிடைக்க போவது கிடையாது. அதற்கு மாறாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே ரூபாய் 200 மானியம் கிடைக்கும். இவர்கள் மட்டுமே அதைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி… இலங்கையில் நிறுத்தப்பட்ட சமையல் எரிவாயு விநியோகம்…!!!

இலங்கையில் சமையல் எரிவாயு கையிருப்பு இல்லாததால் நாடு முழுக்க சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு  கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, எரிவாயு நிரப்பக்கூடிய மையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சமையல் எரிவாயு கையிருப்பு தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு முழுக்க சமையல் எரிவாயு வினியோகத்தை நிறுத்திவிட்டனர். நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனம், புதிதாக கையிருப்பு வந்த பின் […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் உடைப்பு…. விறகுகளாக விற்கும் இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் சிறைபிடித்த விசைப்படகுகளை விறகுகளாக விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த விசைப்படகுகளை சமையல் எரிவாயு பற்றாக்குறையால் விறகுகளாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு வேதனையை உண்டாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படை 200க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றியது. அவற்றை கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி…. இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை….!!!!

இந்தியா பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை, சமையல் எரிவாயுவை இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிஇஓ திஷேரா ஜெயஷிங் கடிதம் எழுதியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், எரிவாயு தொழிலில் மிகப் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அதனைப் போலவே சமையல் எரிவாயுவின் விலையும் 900 ரூபாய் கடந்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலம் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் […]

Categories
மாநில செய்திகள்

8 மாதங்களில் 8வது முறை சிலிண்டர் விலை உயர்வு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் இந்திய  எண்ணை நிறுவனங்கள் சமீபத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தபடாமல்  அதை விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி  சமையல் எரிவாயு விலை ரூ.15 ஆக உயர்த்தி ரூ.915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் சிலிண்டர் வாங்கும் நிலை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு ….எண்ணெய் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ….!!

ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36 ஆக உயர்ந்து ரூ.1867.50 விற்பனை செய்யப்படுகிறது தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் போன்றவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டு வருகிறது. அதன்படி நேற்று சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வுக்கு எதிர்ப்பு…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கே இது நியாயமா…? மானியம் கொடுங்கள்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… “இனியும் பொறுக்க மாட்டார்கள்”… மத்திய அரசை எச்சரிக்கும் கமல்ஹாசன்….!!!

தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

SPECIAL NEWS: மிஸ்டுகால் கொடுத்தால்…. உடனே fire…!!!

புதிய சமையல் எரிவாயு வாங்குவதற்கான சிறப்பு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு புதிய சிலிண்டர் வேண்டுமென்றால், நீங்கள் அலைய வேண்டியது இல்லை. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும்.  அப்படிப்பட்ட ஒரு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ் எம் வைத்தியா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. மாதர் சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் தட்டுப்பாடு இன்றி தமிழ்நாடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு இனி இதுதான் நிலை… மாதர் சங்கத்தினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாதர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் தங்களின் தலையில் விறகுகளை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதா கோவில் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் பழனியம்மாள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது  பெண்கள் தங்களது தலையின் மீது விறகுகளை சுமந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் விலை ரூ.875 ஆனா டெலிவரிக்கு ரூ.925… பெரம்பலூரில் இல்லத்தரசிகள் கொந்தளிப்பு..!!

பெரம்பலூரில் சிலிண்டர் விநியோகத்திற்கு ரூ.50 கூடுதலாக வசூல் செய்யப்படுவதால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியிலும், அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சமையல் எரிவாயு பெரம்பலூர், எசனை, வி.களத்தூர் பகுதிகளில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையங்களில் இருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எசனையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு சிலிண்டர் வினியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிலிண்டருக்கு பதிவு செய்யும் நுகர்வோர்களுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

விஷம் போல் ஏறும் சிலிண்டர் விலை…. பொதுமக்கள் சொல்வது என்ன ?

சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா கச்சா எண்ணெய்யை 98 டாலர்களுக்கு கடந்த 2014-ல் வாங்கியது. அப்போது பெட்ரோலியப் பொருள்களில் ஒன்றான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 420 ரூபாயாக இருந்தது.தற்போது கச்சா எண்ணெய் விலை 40 டாலர்கள் உள்ளது. இருப்பினும் சிலிண்டரின் விலை 740 ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது இந்தியாவில் சிலிண்டரின் விலை குறைந்த விலைக்கும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர்… எப்படி அப்ளை பண்றது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING : சமையல் சிலிண்டர் எரிவாயு விலை குறைப்பு ….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]

Categories

Tech |