ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், இந்த அதிமுக பொதுக்குழுவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]
