கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பூங்காவில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மது அருந்தி அசுத்தம் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தற்போது ஏழைகளின் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகின்றது. இதில் காவியம், பெரியார், மேகம் என பல நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் குளித்து மகிழ்வதற்காக கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறுவர் பூங்கா […]
