ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பிரதமர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். அதன் பின்பு, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனவே, நிதியமைச்சரான மக்டலெனா ஆண்டர்சன் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க, நாடாளுமன்ற ஆதரவு அவருக்கு அவசியம். நாடாளுமன்றத்தில் 349 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 175 நபர்களின் […]
