தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]
