விழுப்புரம் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலமாக 6200 கர்ப்பிணிகள் பயனடைந்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தாய்மை அடையும் கர்ப்பிணி பெண்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 12 ஆயிரத்தை 18 ஆயிரம் ஆக தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவைப் பெற்று பயனடைய முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை […]
