இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கையினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளி நல இயக்குநர், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கை குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் டிசம்பர் 2021 முதல் முதற்கட்டமாக தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன், நடத்திய சமவாய்ப்பு கொள்கை விழிப்புணர்வு கூட்டங்களின் மூலம் 3165 நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கையினை வெளியிட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த இடங்களாக 1299 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இப்பணியிடங்களை […]
