சாதி பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நல்லூத்துக்குளி சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொடுத்த மனுவில் கூறியதாவது, நல்லூத்துக்குளி மேற்கு காலனியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் படித்து […]
