பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது, செடி முத்தூர் காலனியில் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த காலனியில் பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடம் என்று எதும் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு […]
