சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பழனியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]
