காவல்நிலையத்திற்கு சென்று ச-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஓடாவி தெருவில் முகமது ஜப்ரான் (29) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தொண்டி காவல் நிலையத்திற்கு தனது நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பர் தமீம் அன்சாரி கொடுத்த புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு பணியிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது சப்-இன்ஸ்பெக்டரை […]
