கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை நாளையுடன் முடிகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் 31ம் தேதியோடு முன்கூட்டியே முடிக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். எனினும் […]
