புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்தனர். இதனையடுத்து புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் […]
