திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி […]
