கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தன. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும் வழங்கின. இதையடுத்து கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஜனவரி 19-ஆம் தேதி அன்று தடுப்பூசிகள் சந்தை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் […]
