துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]
