சந்திரயான்2 விண்கலமானது சென்ற 2019ம் வருடம் ஜூலை 22ம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், படிப் படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அதே வருடத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. இருப்பினும் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது. நிலவின் இருண்டபக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்புகொள்ள […]
