ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் வசதி வழங்க வேண்டும் என்று அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் […]
