கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் வி.புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருடைய மனைவி அன்னபூரணி(42). இவர் வெங்கந்தூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடைய இளைய மகன் தமிழரசன் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து […]
