சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். இவர்கள் சத்துணவுத் துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் துணைத் தலைவர் அலமேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஏசுமணி, ஒன்றிய செயலாளர் இந்துமதி, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா […]
