கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்திலிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015ம் வருடம் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகில் குறிப்பிட்ட தொலைவில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் வருடம் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அவர்களால் இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித் தனியாக இயங்கி வருகிறது. […]
